Nilavai Suttum Viral / நிலவைச் சுட்டும் விரல்
-
₹270
- SKU: KCP012
- ISBN: 9788119034796
- Author: Yuvan Chandrasekar
- Language: Tamil
- Pages: 216
- Availability: In Stock
இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசிக்கும்போதோ, நினைவுக்கு வந்த அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் கோத்துத் தருபவை. அனைத்துக் கட்டுரைகளுமே கவிதை பற்றிப் பேசுபவை; கவிதையியல் பற்றியவை அல்ல. எனக்கு நானே பேசிக்கொண்டதைக் கோத்து வைத்திருக்கிறேன். மற்றபடி, கவிதையுடனான சகவாசம், எந்த அளவிலுமே கிளர்ச்சி தரக்கூடியது. காலச்சுவடு இதழில் தொடர் பத்தியாக வெளியான கட்டுரைகளுடன் புதிதாக எழுதப்பட்டவையும் சேர்ந்தது இந்தத் தொகுப்பு. யுவன் சந்திரசேகர்








